Social media

Tuesday, 27 September 2022

தொடரும் சமூக அநீதி



சமூகநீதி திமுக ஆட்சியில், இ.நி.ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்குவதில்கூட சமூக நீதியைப் பின்பற்றாத பள்ளிக் கல்வித்துறை!


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


தமிழ்நாடு அரசு ஆணைகள்,

62 ப.க.து. நாள்.13.3.2015

128 ப.க.து. நாள்.7.5.2010

2218 பொ.து நாள் 14.12.1981

328 பொ.து நாள் 21.2. 1967

ஆகியவற்றின் படி விடுமுறை நாளில் பயிற்சியில் / பணியில் ஈடுபட்ட ஆசிரியர் / அரசு ஊழியர்களுக்கு மட்டும், வழக்கமான பணி நாள்களில் அவர்கள் விரும்பிய தேதியில் ஈடு செய் விடுப்பு* வழங்கப்பட வேண்டும்.


ஆனால், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் & தொடக்கக் கல்வி இயக்குநர் கையொப்பத்துடன் சமூக வலைதளங்களில் இன்று (27.09.2022) வெளிவந்துள்ள செய்தி அறிக்கையில், அக்டோபர் 6, 7 & 8-ஆம் தேதிகளில் ஈடுசெய் விடுப்பு வழங்குவதாகவும், 10.09.2022 முதல் 6 - 12-ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் செயல்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன் மூலம், கோடை விடுமுறையில் எண்ணும் எழுத்துப் பயிற்சியில் கலந்து கொண்ட 1 - 3 போதிக்கும் இடைநிலை / ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையான அனைத்து தொடக்க - நடுநிலை - உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஈடுசெய் விடுப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.


'எண்ணும் எழுத்தும்' எந்த வகுப்புகளுக்கு மட்டும் நடைமுறையில் உள்ளது என்பதும், எந்தெந்த ஆசிரியர்களுக்கு மட்டும் 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி வழங்கப்பட்டது என்பதும் கல்வித்துறை அதிகாரிகளுக்கே தெரியாதா?


தமிழ்நாடு அரசு விதிகளின்படி ஈடுசெய் விடுப்பு துய்க்க அடிப்படையான தகுதி இல்லாத (விடுமுறையில் பணியாற்றாத) ஆசிரியர்களுக்கும் சேர்த்து வழங்கும் விடுப்பு எவ்வகையில் ஈடுசெய்யும் விடுப்பாக இருக்கும்?


விடுமுறையில் பணியாற்றாத ஆசிரியர்களுக்கு ஈடுசெய்யும் விடுப்பு வழங்க முடியுமா? 


மேலும் மேற்குறிப்பிட்ட அரசாணைகளின் படி, ஈடு செய்யும் விடுப்பைத் துய்ப்போர் மற்றவர்கள் பணியாற்றும் பணி நாளில் தான் துய்க்க இயலும். அப்படியானால், அனைவருக்குமே விடுமுறை (அதாவது பணி நாளே இல்லாத) நாளில் வழங்குவது எந்த விதிகளின் படி ஈடுசெய் விடுப்பாகக் கருதப்படலாம்?


மேற்குறிப்பிட்ட அரசாணைகளின் படி ஈடு செய்யும் விடுப்பு என்பது விடுப்பு துய்க்கத் தகுதியுடைய நபர், தானே விரும்பி எடுப்பது என்பதோடே 6 மாதங்களுக்குள் காலாவதியாகக் கூடிய விடுப்பாகும். இதனை அதிகாரிகள் தாமே முன் வந்து இந்தத் தேதிதான் உனக்கான ஈடுசெய் விடுப்பு; அடுத்த விடுப்பையும் நானே முடிவு செய்வேன் என்பது எந்தவகையான விதிமுறை?


விடுமுறையில் பணியாற்றியோர் & விடுமுறை துய்த்தோர் என அனைவருக்கும் ஈடுசெய் விடுப்பு வழங்குவதுதான் சமூக நீதியா?


சமூகநீதி பேசும் திமுக ஆட்சியில், விடுமுறையில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு அரசு விதிகளின்படி விடுப்பு அளிப்பதில்கூட சமூகநீதியைப் பின்பற்றாத துறையாகத்தான் பள்ளிக் கல்வித்துறை உள்ளதா?


ஊதியம் & ஓய்வூதியம் சார்ந்த கோரிக்கைகளைத் தீர்த்து வைக்காது முதல்வர் மீது நம்பிக்கை வைத்து மட்டுமே நகரும் ஆசிரிய இயக்கங்கள், ஈடுசெய் விடுப்பு துய்க்கும் உரிமையை இழந்து, விதிகளிலில்லா புதுவித அறிவிப்பால் ஏளனப்படுத்தப்பட்டு மீண்டும் மனவேதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்காக குரல் கொடுத்து நீதியை நிலை நாட்டுமா?


ஆசிரிய இயக்கங்கள் கேட்டுக்கொண்டதைக் கருத்தில்வைத்து இப்புதுவித விடுப்பு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. . . இதைத்தான் சங்கங்கள் கேட்டனவா?


இல்லை. . . நியாயமான உரிமையையே கேட்டோம் என்றால். . . இடைநிலை ஆசிரியர்களுக்கு எதிரான இந்த சமூக அநீதிக்கு எதிராக தொடக்கக் கல்வித்துறை சங்கங்களின் அடுத்தகட்ட நகர்வு என்ன?*


_எதிர்பார்ப்புகளுடன். . .,_

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

Tuesday, 21 June 2022

உலக யோகா தினம் ஜூன்-21

 இன்று எங்கள் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப் பட்டது.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி- புதுக்குடிசை 



Tuesday, 10 May 2022

SMC மறு கட்டமைப்பபுக் குழு கூட்டம்:

 SMC மறு கட்டமைப்புக் குழு கூட்டம்.ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி புதுக்குடிசை.



Saturday, 23 April 2022

Book day April 23 PUPS PUDUKUDISAI

 உலக புத்தக தினம் எமது பள்ளியில் கொண்டாடப்பட்டது.



Wednesday, 20 April 2022

Water Tank for plate washing PUPS-PUDUKUDISAI 2022

நமது பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு சாப்பிட்ட பிறகு இருந்து வந்த தட்டு கழுவும் பிரச்சனை நமது பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஊராட்சி உறுப்பினர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள்,பள்ளி மாணவர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர்களின் முயற்சியால் இன்று நிறைவேறியது. அனைவருக்கும் நன்றி நன்றி

🙏🙏🙏🙏



Tuesday, 19 April 2022

எளிய உடற்பயிற்சி-PUPS-PUDUKUDISAI

 உடற்கல்வி ஆசிரியை திருமதி.ஜெயா அவர்கள் எம் பள்ளி மாணவர்களுக்கு எளிய உடற்பயிற்சி கற்றுக் கொடுத்தார்கள்.







Friday, 25 March 2022

பள்ளிக்கு அன்பளிப்பு வழங்கிய மாணவச் செல்வங்கள்

 📯📯📯📯📯📯

நமது பள்ளிக்கு இரண்டு Duster அன்பளிப்பாக வழங்கிய மாணவச் செல்வங்கள்

விஷ்ணு,

வரதன்.

அவர்களுக்கு நன்றி.

இப்படிக்கு.

PUPS-புதுக்குடிசை.

Sunday, 20 March 2022

பள்ளி மேலாண்மைக் குழு விழிப்புணர்வு கூட்டம்

 பள்ளி மேலாண்மைக் குழு விழிப்புணர்வு கூட்டம். PUPS- PUDUKUDISAI






Friday, 18 March 2022

அரசு பள்ளியின் வளர்ச்சிக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள்

 நமது பள்ளி  நமது பெருமை...


. நீங்கள் ஒவ்வொருவரும் எங்களுக்கு முக்கியம்.

. ஒவ்வொரு மாதமும் நடைபெறும் SMC கூட்டத்தில் உதவி செய்தவர்களின் பெயர், தொகை வெளிப்படையாக தீர்மானம் நோட்டில் எழுதி பாதுகாத்து பாராட்டு தெரிவிக்கப்படும்.

இப்படிக்கு

 தலைமை ஆசிரியர்,                          பள்ளி ஆசிரியர்கள்.   ஊ.ஒ.தொ.பள்ளி-புதுக்குடிசை

Thursday, 3 March 2022

தற்செயல் விடுப்பு விண்ணப்பம்

 


ஆசிரியர்களுக்கு பயனுள்ள தற்செயல் விடுப்பு விண்ணப்பம்

👇For download 

CLICK HERE



Monday, 28 February 2022

National Science day PUPS-PUDUKUDISAI

தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்.
ஊ.ஒ.தொ.பள்ளி- புதுக்குடிசை