Friday, 10 March 2023

மூன்று நபர் ஊதிய குழு சந்திப்பு -SSTA





 எது வரலாற்றுப்பிழை : சமவேலைக்கு சம ஊதியக் குழுவின் அழைப்பா?AIFETO அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட பதிவா?


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடி வரும் சங்கங்களில் இரண்டை மட்டும் முதற்கட்டமாக அழைத்துப் பேசுவது வரலாற்றுப் பிழையென AIFETO அண்ணாமலை அவர்கள் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அரசின் அழைப்பு ஒருபுறம் இருக்கட்டும், முதற்கண் அண்ணாமலையாரின் இப்பதிவுதான் வரலாற்றுப் பிழையானது.


தற்போது குறிப்பிடப்படும் சொல்லாடலான 'சமவேலைக்கு சம ஊதியம்' என்றால், தமிழ்நாட்டில் 2009 சூன் 1-ற்குமுன் பணியேற்ற இ.நி.ஆ-களைப் போலவே  சமவேலை பார்க்கும் 2009 சூன் 1-ற்குப்பின் பணியேற்ற இ.நி.ஆ-களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதே.


சுருக்கமா சொல்லனும்னா, 01.06.2009-ற்குப் பின்னும் VI PAY COMMISSION பெருக்குக் காரணியான 1.86-ஆல் பெருக்கி இ.நி.ஆ ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதுவே போதும் என்பதே.


இதில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை என்ற போதிலும் சக இ.நி.ஆ-வாக (AIFETO மறைக்க முயலும்) ஒரு உண்மையை நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். 


2014-ற்குப் பிறகு இக்கோரிக்கையை முன்வைத்துப் போராடிய ஒரே சங்கம் என்றால் அது SSTA (இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்) மட்டுமே.


AIFETO அண்ணாமலை அவர்கள் தனது பதிவில் குறிப்பிட்டதுபோல JACTTO-GEO-வில் உள்ள எந்தவொரு சங்கமும் இக்கோரிக்கையை முன்வைத்து எந்தவொரு போராட்டத்தையும் தனித்தோ / JACTTO-GEO கூட்டமைப்பாகவோ போராடவே இல்லை என்பதே வரலாற்று உண்மை.


சமவேலைக்கு சம ஊதியம் தொடர்பான குழுவின் அரசாணையிலும், தற்போதைய அழைப்புக் கடிதத்திலும் இது தெள்ளத்தெளிவாகவே தேதிபோட்டு. . . . "27.12.2022 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர் பதிவுமூப்பு இயக்கத்தின் கோரிக்கையான. . ." என்று வெளியிடப்பட்டுள்ளது.


இதுலபோயி. . . . நானும் ரவுடிதேன் என்னையும் வண்டீல ஏத்துங்க என்ற வடிவேலுவின் நகைச்சுவையைப் போல அறிக்கை வெளியிட்டுள்ளார் AIFETO அண்ணாமலை அவர்கள். சாரே! நீங்கள் பூசணிக்காயைக்கூட சோற்றில் மறைக்கலாம் சாரே! பட்சே, பூமி உருண்டையை சோற்றில் மறைக்கான் சாரே!


அப்ப JACTTO-GEO இ.நி.ஆ ஊதியத்திற்காகப் போராடவே இல்லையா. . . .? போராடியுள்ளது. 2011 முதலே டிட்டோஜாக், JACTTO-GEO போராட்டங்களிலும், நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் தனிச்சங்க போராட்டங்களிலும் இ.நி.ஆ ஊதியத்திற்கான கோரிக்கை முக்கியக் கோரிக்கையாக இருந்தது. அக்கோரிக்கை என்பது திமுக 2009-ல் பறித்த, 20 ஆண்டுகால இ.நி.ஆ உரிமையான மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பதே!


தமது ஆட்சிகாலத்தில் செய்த வஞ்சகம் என்பதாலோ என்னவோ தற்போதும் திமுக இக்கோரிக்கைக்குச் செவிமடுக்க 100% தயாராக இல்லை. மாறாக SSTA-ன் போராட்டத்தை அடுத்து அவர்களின் கோரிக்கை குறித்து ஆராய குழு அமைத்துள்ளது. இதையும் செய்து கொடுத்துவிடுமா என்று 100% உறுதியாக யாரும் சொல்லவே முடியாது.


இத்தகைய சூழலில் இக்கோரிக்கைக்காக மெய்யாகவே களத்தில் நின்ற SSTA-வை அழைத்துள்ளது குழு.* கூடவே ஆளும் கட்சியின் ஆசிரியர் இயக்கத்தையும் அழைத்துள்ளது.


இதில், அனைத்து சங்கங்களையும் அழைத்துப் பேச வேண்டும் என்பதோ / அனைவரையும் ஒரே கட்டமாக அழைத்துப்பேச வேண்டும் என்பதோ தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர் சங்கங்கள் அனைத்திற்குமான கோரிக்கையாக இருக்கலாம்; மறுக்கவில்லை. அதனை வலியுறுத்த வேண்டிய பொறுப்பு ஒரு இயக்கத்தின் நிருவாகி என்ற முறையில் AIFETO அண்ணாமலை அவர்களுக்கும் உள்ளது ஏற்கிறேன்.


ஆனால், 'சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடி வரும் சங்கங்களில் இரண்டை மட்டும்' என்று குறிப்பிட்டு SSTA-விற்கு மட்டுமேயான போராட்ட உரிமையில், அக்கோரிக்கைக்காகப் போராடாதவர்கள் சொந்தம் கொண்டாடுவதெல்லாம். . . . மற்றுமொரு தவறான முன்னுதாரணமே!


இப்போதும், களத்தில் தங்களுக்கான கோரிக்கையை முன்வைத்துப் போராடிய ஆசிரியர்களுக்கு, எங்கே மற்ற சங்கங்களையும் அழைப்பதால் தமது கோரிக்கை நீர்த்துப்போய்விடுமோ என்ற அச்சமும் வெளிப்படுவதை அவர்களது பதிவுகளின் வழி அறியமுடிகிறது.


அவர்களுக்கு வரலாறு கூறும் உண்மை, இக்குழுவின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து மீண்டுமொரு ஏமாற்றத்திற்குள் வீழ வேண்டாம். 


ஏனென்றால், அண்ணா பெயரைச் சொல்லி தருவதாக உறுதியளித்த Incentive முறையை, தானே சட்டசபையில் முன்மொழிந்து ஒழித்துக்கட்டியுள்ளவர் நமது தற்போதைய மாண்புமிகு முதல்வர் அவர்கள்.


எனவே,

அவரு செஞ்சா மட்டுந்தேன் நிச்சயம்!

நம்பிக்கிட்டே இருந்தோம்னா நாம பைத்தியம்!

எண்ணும் எழுத்தும் தோரணம் கட்டி மகிழ்வோம். 'ஊ' வரிசை எழுத்துகள்.

   எண்ணும் எழுத்தும் தோரணம் கட்டி மகிழ்வோம். 'ஊ' வரிசை எழுத்துகள்.